’ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்’ விலை உயர்வு... ரயில்வேதுறை அறிவிப்பு

சனி, 31 ஆகஸ்ட் 2019 (14:47 IST)
நம் நாட்டில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ரயில்வேதுறைதான். இதில் பல லட்சக்கணக்ககாணோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிவருகிறது அரசு. இந்நிலையில் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் ( IRCTC ) செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த மூன்றாண்டுகளாக நிறுத்திவைத்திருந்த ஆன்லைன் ’ரயில்டிக்கெட் சேவைக்கட்டணம் ’உயர்த்தப் படுவதாக  ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி இந்த ரயில்டிக்கெட் சேவைக் கட்டணத்துடன் இணைந்து சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்படவுள்ளது. இந்த புதிய சேவைக்கட்டணம் நாளை ( செபடம்பர் 1 ஆம் தேதிமுதல் )அமலுக்குவருகிறது.
 
இந்த ரயில்சேவைக் கட்டணத்தில் குளிர்சாதன வசதியற்ற பெட்டிகளுக்கு ரூ. 15 , குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகளுக்கு ரு. 30  வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் முன்பிருந்த ரூ. 20, ரூ, 40 ஆகிய கட்டணத்தை குறைத்து சேவைக் கட்டணம் வசூலிக்கபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே நாட்டில் பணப்புழக்கம் குறைந்து மக்களின் நுகர்வுகள் குறைந்து பொருளாதாரம் மந்தம் நிலவுகின்ற நிலையில் தற்போது, ரயில்வேதுறை ஆன்லைன் ஆன்லைன் ரயுல்சேவைக் கட்டணத்துடன், சரக்கு மற்றும் சேவை வரியை உயர்தியுள்ளது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாகவே பார்க்கப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்