அதற்கு ரயில்வே வாரியம் அளித்துள்ள தகவலில், கடந்த 2016 - 17 ஆம் ஆண்டுகளில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் சென்றோரிடம் அபராதமாக ரூ. 405. 30 கோடியும், 2017 - 18ஆம் ஆண்டுகளில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் சென்றோரிடம் அபராதமாக ரூ. 441. 62 கோடியும் , 2018 - 19ஆம் ஆண்டுகளில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் சென்றோரிடம் அபராதமாக ரூ.530.6கோடியும் ஆக மூன்றாண்டுகளில் ரூ. 1377 கோடிருபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அதாவது, ரயில்வே பாதுகாப்பு படை சட்டம் பிரிவு 137-ன் கீழ் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வோரிடம் குறைந்த பட்சம் ரூ. 250 ம், அதிகபட்சமாக ரூ.1000 வசூலிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த முடியாதவர்களுக்கு குறைந்த பட்சம் 6 மாத சிறை தண்டனை உண்டு. இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.