நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் காலம் விரைவில் வரும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்தியில் ஆட்சியில் இருந்து வரும் பாஜக அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி அதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக சாதிவாரி கணக்கெடுப்பு இருந்தது. ஆனால் தேர்தல் தோல்வியால் அதை நிறைவேற்ற முடியவில்லை. நாட்டின் உண்மை நிலவரம் என்ன என்பதை சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.
நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் காலம் விரைவில் வரும். ஆட்சி நிர்வாகத்தில் தங்களுடைய பங்கு என்ன, அதிகாரம் என்ன என்று அனைத்து பிரிவினரும் அறிந்து கொள்வதற்காக தான் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
அரசமைப்பு சட்டத்தின் மீது பாஜக, ஆர்.எஸ்.எஸ். தாக்குதல் நடத்தி வருகின்றனர். நாட்டின் குரல் மீதான தாக்குதல் இது. அம்பானியின் நிறுவனங்களில் எந்த ஒரு தலித் தொழிலாளிகளும் இல்லை என்பதே இதற்கு சாட்சி என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.