தெலங்கானாவில் தொடங்குகிறது சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழகத்தில் எப்போது?

Siva

செவ்வாய், 5 நவம்பர் 2024 (16:45 IST)
தெலுங்கானா மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நாளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 நாடு முழுவதும் தெலுங்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஒரு சில மாநிலங்களில் ஏற்கனவே ஜாதி வாரி கணக்கெடுப்பு பணி முடிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நாளை சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கும் என்றும், நவம்பர் 30ஆம் தேதிக்குள் கணக்கெடுப்பு பணி முடித்து, அறிக்கைகள் பொது தளத்தில் வெளியிடப்படும் என்றும் தெலுங்கானா மாநில அரசு தெரிவித்துள்ளது.

தெலுங்கானாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆட்சிக்கு வந்தவுடன் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தற்போது ஜாதி வாரி கணக்கெடுப்பை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டு ஜாதி வாரி கணக்கெடுப்பு தெலுங்கானாவில் நடத்தப்பட்ட நிலையில், அதற்கான முடிவுகளை அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் நிலையில், தமிழகத்தில் எப்போது கணக்கெடுப்பு நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்