ராகுல்காந்திக்கு ஒரே வருடத்தில் கிடைத்த மிகப்பெரிய பரிசு

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (19:23 IST)
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக கருதப்பட்ட ஐந்து மாநில தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதேபோல் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த காங்கிரஸ் மிகப்பெரிய எழுச்சியை பெற்றுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா காந்தியிடம் இருந்து ராகுல்காந்தி பெற்றார். ஒரே ஆண்டில் அவர் வகுத்த வியூகங்கள், இடைவிடாத பிரச்சாரங்கள், கட்சியினர்களை ஒருங்கிணைத்து செயல்பட்ட விதம் ஆகியவற்றால் தற்போது மூன்று பெரிய மாநிலங்களை பாஜகவிடம் இருந்து தட்டிப்பறித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ஆன ஒரே வருடத்தில் ராகுல் காந்திக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாகவே இது கருதப்படுகிறது.

இதே ரீதியில் ராகுல்காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சியினர்களையும் கூட்டணி கட்சியினர்களிடமும் நட்பு முறையை கடைபிடித்தால் நிச்சயம் வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார் என்பது உறுதி என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்