ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அனைத்தும் பாஜக வுக்கு எதிராக வந்து கொண்டிருக்கின்றன. பாஜக ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மத்தியப் பிரதேசத்திலும் தனது செல்வாக்கை இழந்துள்ளது. இதனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வீசியதாக கூறப்பட்ட மோடி அலை ஓய்ந்து விட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.