டிராக்டரில் சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்: ஹரியானா எல்லையில் பதட்டம்!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (17:13 IST)
டிராக்டரில் சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹாத்ராஸ் என்ற பகுதியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த இளம் பெண் ஒருவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக தனது சகோதரி பிரியங்கா காந்தி உடன் சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப் பட்டார் என்பதும் அது மட்டுமின்றி அவர் கீழே தள்ளி விடப் பட்டார் என்றும் கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் பஞ்சாப் மாநிலத்திலிருந்து டிராக்டரில் சென்ற ராகுல் காந்தி ஹரியானா மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஹரியானா மாநிலத்தில் டிராக்டரில் ராகுல் காந்தி மற்றும் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் டிராக்டரில் சென்று கொண்டிருந்த நிலையில் ஹரியானா எல்லையில் ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
 
புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி இந்த டிராக்டர் பேரணியை நடத்தி உள்ளார் என்பதும் இந்த டிராக்டர் பேரணி ஹரியானா மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த டிராக்டர்களில் பஞ்சாப் முதல்வர் ராமன் சிங் மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில் ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்