இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு வழங்கும் சான்றிதழில் உள்ள பிரதமரின் புகைப்படத்தை பஞ்சாப், ஹரியான அரசுகள் நீக்கியுள்ளன.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில அரசுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதில் மத்திய அரசு கால தாமதம் செய்வதாக மாநில அரசுகள் பல குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் சத்தீஸ்கர் மாநில அரசு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு வழங்கும் சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கியது. அதை தொடர்ந்து பஞ்சாப் அரசும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.