ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு வரி விதிக்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் வரி விதிப்பு அதிக அளவில் இருப்பதால் நாட்டு மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் பஞ்சாப் மாநிலத்தில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறுத்து பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,
ஆடு, நாய், பூனை, பன்றி, மான் வளர்பவர்கள் ஆண்டுக்கு ரூ.250 வரி செலுத்த வேண்டும். எருமை மாடுகள், காளை மாடுகள், ஒட்டகம், குதிரை, பசுமாடு, யானை வைத்திருப்பபவர்கள் ஆண்டுக்கு ரூ.500 வரி செலுத்த வேண்டும். மேலும் பிராணிகளை வணிக குறியீடு செய்து, அதன் உடலில் மைக்ரோ சிப் பொருத்தப்படும்.
இவ்வாறு பஞ்சாப் மாநில அரசு வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு விதிக்கப்படும் வரி குறித்து தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பஞ்சாப் மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரி விதிப்பு பஞ்சாப் மாநில விவசாயிகளுக்கு பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.