‘வெள்ளிக்கிழமை விஷால் நேரில் ஆஜராக வேண்டும்’ - வருமான வரித்துறை உத்தரவு

செவ்வாய், 24 அக்டோபர் 2017 (10:06 IST)
விஷால் அலுவலகத்தில் நேற்று ரெய்டு நடத்திய வருமான வரித்துறையினர், வருகிற வெள்ளிக்கிழமை விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

 
‘மெர்சல்’ படத்தை பாஜக எதிர்த்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னைகளில், பாஜகவின் தேசிய இணைச் செயலாளரான ஹெச்.ராஜாவுக்கு எதிராக விமர்சனம் செய்தார் விஷால். நேற்று முன் தினம் நடந்த இந்த சம்பவத்தால், நேற்று வடபழனியில் உள்ள விஷாலின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.
 
இந்த ரெய்டில் ஈடுபட்டது ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் என்று கூறப்பட்டது. ஆனால், வருமான வரித்துறையினர் தான்  சோதனை நடத்தியது என பின்னர் தெரியவந்தது. ரெய்டு நடந்தபோது அங்கு விஷால் இல்லை. அவர் ஷூட்டிங்கில் இருந்தார்.
 
விஷாலின் அலுவலகத்தில் இருந்து டி.டி.எஸ்.ஸுக்காகப் பிடித்தம் செய்த 51 லட்ச ரூபாய் அரசுக்கு செலுத்தப்படாமல் இருந்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள், விஷால் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்