தளர்வும் கிடையாது; ஒன்னும் கிடையாது! – ஸ்ட்ரிக்டு காட்டும் மாநிலங்கள்!

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2020 (13:23 IST)
இன்று முதல் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகள் அளிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் சில மாநிலங்கள் தளர்வுகள் கிடையாது என அறிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் தாக்குதலால் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஊரடங்கு தொடர்ந்து வருவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதோடு, தொழில்துறைகளும் முடங்கியுள்ளன. இரண்டாம் கட்டமாக மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் பாதிப்பில்லாத பகுதிகளில் தளர்வுகள் வழங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.

அதை தொடர்ந்து கேரளா அதிகமாகவே தளர்வை வாரி வழங்கியதால், மத்திய அரசு ஊரடங்கு நோக்கம் குலைப்பதாக உள்ளதாகவும் கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில் எந்த விதமான தளர்வுகளும் வழங்கப்படாமல் மே 3 வரை ஊரடங்கு கண்டிப்பாக பின்பற்றப்படும் என கர்நாடகம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் தளர்வுகள் அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் பல மாநிலங்கள் தளர்வின்றி ஊரடங்கை செயல்படுத்த ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்