300 ஐ நெருங்கும் பாதிப்பு! – 100ஐ நெருங்கிய ராயபுரம்! சென்னை ரிப்போர்ட்!

திங்கள், 20 ஏப்ரல் 2020 (11:21 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 300 ஐ நெருங்கியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. முக்கியமாக சென்னையில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்புகள் உள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக ராயப்புரத்தில் 91 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. திரு.வி.க நகரில் 38 பேரும், கோடம்பாக்கத்தில் 29 பேரும், அண்ணா நகரில் 26 பேரும், தண்டையார்பேட்டையில் 30 பேரும், தேனாம்பேட்டையில் 36 பேரும் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி செய்தி வெளியிட்டுள்ளது. மற்ற பகுதிகளில் 10க்கும் குறைவான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்