பயணிகளின் குறைகளை கேட்க பேருந்தில் பயணம் செய்த தமிழிசை! வைரல் புகைப்படங்கள்!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (16:04 IST)
களின் குறைகளை கேட்க பேருந்தில் பயணம் செய்த தமிழிசை
புதுவை மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் பேருந்து பயணிகளிடம் குறை கேட்பதற்காக பேருந்திலேயே பயணம் செய்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 
 
இன்று புதுவை மாநிலத்தில் உள்ள தவளைகுப்பம் என்ற பகுதிக்கு செல்லும் பேருந்தில் திடீரென பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆளுனர் தமிழிசை ஏறினார். அவர் தனக்கும் தன்னுடைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தன்னுடைய சொந்த காசில் டிக்கெட் எடுத்துக் கொண்டதோடு அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் 
 
ஒரு சிலர் கூறிய குறைகளை அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் சிலர் கூறிய குறைகளை மனுவாக எழுதி ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்புங்கள் என்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் 
 
பேருந்தில் நின்று கொண்டே பயணம் செய்த தமிழிசை சவுந்தரராஜன் அனைத்து பயணிகளிடமும் அவர்களுடைய குறைகளை கேட்டறிந்ததோடு கண்டக்டர் மற்றும் டிரைவர் ஆகியோர்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். இது குறித்த புகைப்படங்கள் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்