ரஜினி தொடக்கவிருந்த கட்சியின் தலைமைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜூன் மூர்த்திக்கு தேர்தல் ஆணையம் ரோபோ சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த பின்னர், இந்த முடிவிலிருந்து பின்வாங்கினார். இந்நிலையில் அவர் தான் தொடங்கவிருந்த கட்சியின் தலைமைப் பொறுப்பாளராக நியமித்திருந்த அர்ஜூன் மூர்த்தி சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கினார் வரும் சட்டசபைத் தேர்தலில் இவரது கட்சி போட்டியிடவுள்ளது.
இந்நிலையில் அவருக்கு தேர்தல் ஆணையம் ரோபோ சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
அர்ஜூன் மூர்த்தி பாஜகவில் மாநில தொழில்நுட்பபிரிவில் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.