தேசிய அரசியலில் களமிறங்கும் பிரியங்கா.. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா?

Siva
வியாழன், 15 பிப்ரவரி 2024 (07:09 IST)
கடந்த சில ஆண்டுகளாக உத்தரப்பிரதேச மாநில அரசியல் செய்து கொண்டிருந்த பிரியங்கா காந்தி தற்போது தேசிய அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அதுமட்டுமின்றி அவர் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்தியா கூட்டணியில் தேசிய அளவில் பிரபலமாக இருக்கும் ஒரு முகத்தை கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டு உள்ள காங்கிரஸ் பிரியங்கா காந்தியை களமிறக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதுவரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருந்த அவரை சோனியா காந்தி போட்டியிட்ட ரேபேலி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாகவும் அல்லது புதுச்சேரியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
நாடு முழுவதும் மக்களுக்கு தெரிந்த முகம் ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இதற்கு மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்றும் பிரதமர் மோடிக்கு சவாலான பிரதமர் வேட்பாளராக பிரியங்கா காந்தி இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்