அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பிடன், தனது உரையில்,
அமெரிக்காவில் பல்வேறு சோதனைகளைக் கடந்துமக்களாட்சி வென்றுள்ளது. நாம் தொலை தூரத்தைக் கடந்து வந்திருக்கிறோம். இன்னும் வெகு தூரம் செல்லவேண்டும். நமது தழும்புகள் ஆற வேண்டியது உள்ளது.
தற்போதைய கொரோனா தொற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அது விரையில் சரி செய்யப்படும்.
அமெரிக்காவில் வன்முறை முடிந்து தற்போது அமைதியான காலம் பிறந்துள்ளது உலக நாடுகளுடன் நட்பு ஏற்படுத்துவோம். எனக்கு எனக்கு ஓட்டுப் போட்டவர்கள் ஓட்டுப்போடாதவர்கள் என அனைவருக்கும் நான் அதிபர் என்று தனது மிகச்சிறந்த சொற்பொழிவாற்றினார் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
அதேபோல், அவருக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களும் அதிபர்களும், முக்கிய தலைவர்களும் அரசியல்வாதிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில், எனது மனமார்ந்த வாழ்த்துக்களை ஜோ பிடனுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய – அமெரிக்கா இருநாட்டு உறவுகளும் மேலும் வலுப்படும் எனத் தெரிவித்துள்ளார்.