கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு: இன்புளூயன்சா வைரஸ் குறித்து எச்சரிக்கை!

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (14:23 IST)
இன்புளூயன்சா காய்ச்சலுக்கு கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இன்புளூயன்சா காய்ச்சல் தற்போது மிக வேகமாக பரவி வரும் நிலையில் இது குறித்து மத்திய அரசு சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்கள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 
 
உடல் பருமன், நீரிழிவு நோய், கல்லீரல், கணைய பாதிப்பு போன்ற இணை நோய் உள்ளவர்கள் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். 
 
நாடு முழுவதும் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கை போல செயல்பட வேண்டும் என்று மத்திய அரசின் சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்