வைரஸ் பாதிப்புக்கு 19 குழந்தைகள் பலி; முக கவசம் கட்டாயம் என முதல்வர் வலியுறுத்தல்!

திங்கள், 6 மார்ச் 2023 (17:31 IST)
மேற்குவங்க மாநிலத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 19 குழந்தைகள் பலியானதை அடுத்து அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
 
 கடந்த சில நாட்களாக மேற்கு வங்க மாநிலத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது என்பதும் அதனால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக நோயாளிகள் குவிந்து வருகிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் கடுமையான வைரஸ் காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பாக அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
ஆனால் அதே நேரத்தில் குழந்தைகள் யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 19 குழந்தைகள் உயிர் இழந்து உள்ளனர் என்றும் அவர்களில் 13 பேர் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்