H3N2 காய்ச்சல் வந்தவர்கள் இதை செய்தாலே போதும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வியாழன், 9 மார்ச் 2023 (11:21 IST)
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் H3N2 என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படும் நிலையில் இது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் ஏற்கனவே மத்திய அரசு மருத்துவர்களுக்கு H3N2 வைரஸ் காய்ச்சல் வந்தவர்களுக்கு ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்திருந்தது. இவ்வகையான வைரஸ் காய்ச்சலுக்கு ஆன்டிபயாட்டிக் வழங்கினால் அதன் பிறகு ஆன்டிபயாட்டிக் தேவைப்படும்போது வேலை செய்யாது என்றும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இது குறித்து கூறிய போது H3N2 வைரஸ் காய்ச்சல் வந்தவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வீட்டிலேயே மூன்று நாட்கள் இருந்தால் போதும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
காய்ச்சல் வந்தவர்கள் மூன்று நாட்கள் வீட்டில் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாது என்றும் ஓய்வு எடுப்பதன் மூலம் H3N2 காய்ச்சல் சரியாக விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்