தீவிரவாதியால் வயிற்றில் சுடப்பட்ட நிலையிலும் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி பெண்

Webdunia
திங்கள், 12 பிப்ரவரி 2018 (07:15 IST)
காஷ்மீர் அருகே கடந்த சில நாட்களாக தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே துப்பாக்கி சூடு மோதல் நடந்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் தீவிரவாதி ஒருவன் சுட்ட குண்டு நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் பாய்ந்தது. இருப்பினும் அந்த கர்ப்பிணி பெண் 2.5 கிலோ அழகிய குழந்தையை பெற்றெடுத்த அதிசயம் நடந்துள்ளது

தீவிரவாதிகள், ராணுவம் ஆகிய இரண்டு தரப்பினருக்கிடையே நடந்த தாக்குதலின்போது அந்த பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இருந்த கர்ப்பிணி பெண் ஒருவரின் பின்வயிற்றில் குண்டு பாயந்தது. இந்த நிலையில் குண்டு பாய்ந்த அடுத்த நிமிடம் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குண்டு காயம் இருந்தாலும் அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், குழந்தையை முதலில் வெளியே எடுப்பதற்கான முயற்சிகளை டாக்டர்கள் எடுத்தனர். இதனால் தீவிர முயற்சிக்க்கு பின்னர் அந்த பெண் 2.5 கிலோ குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த பின்னர் அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்து குண்டுகள் அகற்றப்பட்டுள்ளது. தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும், மிகப்பெரிய ஆபத்தை இருவருமே தாண்டிவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்