தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த கருத்துக் கணிப்புகள் குறித்து பிரசாந்த் கிஷோர் கூறிய போது இனி அரசியல் மற்றும் தேர்தல் பற்றி போலி ஊடகவியலாளர்கள் மற்றும் வாய்ச்சவடால் அரசியல்வாதிகள் விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் சமூக வலைதளங்களில் தங்களை தாங்களே நிபுணர்கள் போல் சொல்லி சொல்லிக் கொள்பவர்களின் பயனற்ற விவாதங்களில் கலந்து கொண்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் இந்த முறை பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் 300 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்றும் 2019 தேர்தலில் பெற்ற இடங்களை விட அதிக இடங்களை பெறும் என்றும் கூறியிருந்தார்.
கிட்டத்தட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளும் பிரசாந்த் கிஷோரின் கணிப்பை ஒத்தி போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சிலர் இது போலியான கருத்துக்கணிப்பு என்றும் கருத்து திணிப்பு என்றும் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும் தொலைக்காட்சிகளில் விவாதம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் பிரசாந்த் கிஷோர் போலி ஊடகவியலாளர்களின் அரசியல் விவாதங்களில் கலந்து கொண்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.