பாஜக மீதோ, மோடி மீதோ மக்கள் மத்தியில் கோபம் இல்லை: பிரசாந்த் கிஷோர்

Mahendran

புதன், 22 மே 2024 (16:33 IST)
பாஜக மீதோ, பிரதமர் மோடி மீதோ மக்கள் மத்தியில் பெரிய அளவில் கோபம் இல்லை என்றும் ஆங்காங்கே சில அதிருப்திகள் தென்பட்டாலும் ஆட்சியை மாற்றும் அளவில் தலைகீழாக புரட்டி போடும் வகையில் எந்தவிதமான கோபமும் மக்கள் மத்தியில் இல்லை என்று அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் அதே அளவு வெற்றி பெறும் அல்லது அதைவிட சிறப்பாக வெற்றி பெறும் என்று தான் கணிப்பதாக பிரசாந்த் கிஷோர் என்ற அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 
 
தேர்தல் முடிவை தலைகீழாக புரட்டிப் போடும் வகையில் மக்களுக்கு மத்திய அரசு மீது எந்த கோபமும் இல்லை என்றும் ஒரு சில அதிருப்தி மற்றும் மோடி மீது கோபம் இருந்தாலும் அவை பெரிய அளவில் இல்லை என்றும் இதனால் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக நான் கணிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். 
 
இந்தியா கூட்டணியில் பல முரண்பாடுகள் இருக்கிறது என்றும் ராகுல் காந்தியை அந்த கூட்டணியில் உள்ளவர்களே பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதனால் இந்தியா கூட்டணி அதிகபட்சமாக 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் சில அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட அதையேதான் பிரசாந்த் கிஷோரும் கணித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்