மத்திய அமைச்சர் வீட்டில் பொங்கல், சங்கராந்தி கொண்டாட்டம்! - பிரதமர் மோடி கலந்து கொண்டார்!

Prasanth Karthick
செவ்வாய், 14 ஜனவரி 2025 (07:44 IST)

இன்று பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் நிலையில். பிரதமர் மோடி நேற்றே மத்திய அமைச்சர் வீட்டில் பொங்கல் கொண்டாடியுள்ளார்.

 

 

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதுபோல ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் இன்று மகர சங்கராந்தி விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

நேற்று மத்திய அமைச்சரும் தெலுங்கானா பாஜக மாநில தலைவருமான கிஷண் ரெட்டி வீட்டில் பொங்கல்/சங்கராந்தி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 

இதில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரதமர் மோடி பொங்கல் / சங்கராந்தி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்