ஒரே நாடு.. ஒரே தேர்தல்! ஒப்புதல் கொடுத்த அமைச்சரவை! - விரைவில் மசோதா..!?

Prasanth Karthick

வியாழன், 12 டிசம்பர் 2024 (14:44 IST)

மத்திய பாஜக அரசின் நீண்ட கால திட்டமான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.

 

 

மத்தியில் பாஜக அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி செய்து வரும் நிலையில் பல புதிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அமல்படுத்தி வருகிறது. பாஜகவின் நீண்ட கால திட்டமாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் உள்ளது. அதன்படி, நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் தனித்தனியாக நடைபெறாமல் ஒன்றாக நடத்த திட்டமிடப்படுகிறது.

 

இந்நிலையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டு மத்திய அமைச்சரவையால் ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மசோதா தயாரிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற உள்ளன.
 

ALSO READ: இந்தியா கூட்டணி் தலைவராகும் மம்தா பானர்ஜி.. வெளியேறுகிறதா காங்கிரஸ்?
 

அதை தொடர்ந்து நடப்பு கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை தாக்கல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஏற்கனவே எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதை மசோதாவாக கொண்டு வந்தால் நாடாளுமன்றத்தில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்