அவனிடம் பேச முடியவில்லை... விசாரணை அதிகாரிகளை திணறவிட்ட பயங்கரவாதி

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (17:35 IST)
கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் பேச முடியவில்லை, அவனுக்கு எல்லா விஷயமும் தெரிந்துள்ளது என்று விசாரணை நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
அப்துல் சுபான் குரேஷி என்ற பயங்கரவாதியை டெல்லி காவல்துறையினர் இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்தனர். குரேஷியை உலகத்தில் பல நாட்டு உளவுப்படைகள் தீவிரமாக தேடி வந்தனர். இந்தியாவில் பல இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் குரேஷிக்கு தொடர்புள்ளது.
 
தற்போது விசாரணை அதிகாரிகள் குரேஷியிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் கூறியதாவது:-
 
அவனிடம் பேச முடியவில்லை, அவனுக்கு எல்லா விஷயமும் தெரிந்துள்ளது. தொழில்நுட்பம் தொடங்கி சினிமா வரை அனைத்து பேசுகிறான். ஆனால், முக்கிய தகவல் எல்லாவற்றையும் மறைக்கிறான் என்று கூறியுள்ளனர். 
 
மேலும் அவனிடம் பேசி எந்த விஷயத்தையும் வாங்க முடியவில்லை என்று கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்