சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் நிபந்தனையின்றி ஆதரவு.. மீண்டும் ஆட்சி அமைக்கிறார் மோடி..!

Mahendran
புதன், 5 ஜூன் 2024 (18:04 IST)
டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்களின் கூட்டம் நடைபெற்ற நிலையில் கூட்டத்தின் முடிவில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் நிபந்தனை இன்றி ஆதரவு தெரிவித்ததாகவும் ஆதரவு கடிதங்களையும் அவர்கள் அளித்ததாகவும் இந்த ஆதரவு கடிதங்களை எடுத்துக் கொண்டு பிரதமர் மோடி ஆட்சி அமைக்க குடியரசு தலைவரை சந்திக்க இன்னும் சில மணி நேரத்தில் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
நடைபெற்ற முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 293 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு பல்வேறு நிபந்தனைகளை வைத்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியான. 
 
ஆனால் இன்று நடந்த தேசிய ஜனநாயக முன்னணி கூட்டத்தில் தலைவர்கள் யாரும் நிபந்தனைகள் எதுவும் வைக்கவில்லை என்றும் அனைவரும் ஆதரவு கடிதத்தை தந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் பிரதமர் மோடி குடியரசு தலைவரை சந்திக்க இருப்பதாகவும் அவருக்கு ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் அனுமதி அளிப்பார் என்றும் கூறப்படுகிறது. எனவே மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வரும் எட்டாம் தேதி பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்