இந்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பீகார் முதல்வர் நிதிஸ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு காங்கிரஸ் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது, அவர்களை கூட்டணியை விட்டு செல்லாமல் பிடித்து வைக்க பாஜகவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதனால் இரு கட்சிகளுமே தங்களுக்கு இருக்கும் டிமாண்டை வைத்து டீல் பேசி வருவதாக தெரிகிறது. பாஜக ஆட்சி அமைத்தால் நாடாளுமன்ற சபாநாயகர் பதவியை தங்களுக்கு தர வேண்டுமென நிதிஸ்குமார், சந்திரபாபு நாயுடு இருவருமே கேட்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் முக்கியத்துவம் வகிக்கும் பதவி என்பதால் பாஜக அதை கொடுப்பதை குறித்து தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளதாம். அதற்கு பதிலாக தங்களுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிக்கு துணை பிரதமர் பதவி அளிப்பதாக பாஜக டீல் பேசி வருகிறதாம்.