ஐ.நா சபையின் 75வது ஆண்டு விழாவில் காணொளி மூலம் பேசிய பிரதமர் மோடி ஐநா சபை கட்டமைப்புகளில் மாற்றங்கள் தேவை என தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 75வது ஆண்டு விழா காணொளி வழியாக நடைபெற்றது. அதில் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த பல தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் பேசிய பிரதமர் மோடி ”கடந்த 75 வருடமாக ஐநா சபை பல்வேறு சாதனைகளை புரிந்திருந்தாலும் அதன் முக்கிய நோக்கம் இன்னும் பூர்த்தியாகவில்லை. ஐநா சபை தனது பழைய கட்டமைப்புகளை கொண்டு தற்போது உலக சூழலை கையாள முடியாது” என தெரிவித்துள்ளார்.
மேலும் “1945ல் உருவாக்கப்பட்ட ஐநா சபையில் மாற்றங்களுக்கான முன்னெடுப்பையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார். ஐநா சபையில் இந்தியாவிற்கு நிரந்தர அந்தஸ்து வழங்க கோரி வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பேச்சு கவனம் ஈர்த்துள்ளது.