பெண்கள் தெய்வீக தன்மை உடையவர்கள். ஈஷா யோகா மையத்தில் பிரதமர் பேச்சு

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (20:45 IST)
பாரத பிரதமர் நரேந்திரமோடி சற்று முன்னர் கோவை அருகே ஈஷா யோகா மையத்தில் அமைகபட்டுள்ள ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:




காசி முதல் கோவை வரை சிவபெருமான் நம்மை இணைத்துள்ளார். நம்மிடையே மொழிகள் பல இருக்கலாம், ஆனால் ஆன்மிகம் ஒன்றுதான். உணர்விலிருந்து சிவனுக்கு அழைத்து செல்லும் கிரியா ஊக்கியாக யோகா விளங்குகிறது. யோகா பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் ஒற்றுமையை உணர முடியும்

எங்கே கடவுள் இருந்தாலும், அதோடு சேர்ந்து விலங்கையும், பறவையையும் போற்றுவது நம் வழக்கம். எல்லா திசைகளிலிருந்தும் புதிய சிந்தனைகளை நாம் வரவேற்றுக் கொண்டிருக்கிறோம். பழமை என்பதற்காக, கண்மூடித்தனமாக போற்றுவதும், தூற்றுவதும் தவறு. அதிலுள்ள சரி, தவறுகளை உணர்ந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்

பெண்கள் இயல்பிலே தெய்வீக தன்மை உடையவர்கள் என முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஆண்கள் முயன்றால் தான் அத்தன்மையை பெண்கள் அடைய முடியும். பெண்களின் தெய்வீகதன்மை நிபந்தனையற்றது. ஆண்களின் தெய்வீகதன்மை நிபந்தனைக்கு உட்பட்டது

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் கோவை விமான நிலையம் சென்று பின்னர் அங்கிருந்து டெல்லி திரும்பினார்.
அடுத்த கட்டுரையில்