எல்லை மீறி போறாங்கப்பா..! தொடர்ந்து டிஸ்லைக் வாங்கும் மோடி பேச்சுகள்!

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (09:30 IST)
யூட்யூப் வீடியோக்களை டிஸ்லைக் செய்து எதிர்ப்பு தெரிவிப்பது ட்ரெண்டாகி வரும் நிலையில் அடிக்கடி இந்த ட்ரெண்டிங்கில் பிரதமர் பேசும் வீடியோக்கள் வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து நெப்போடிசம் மீது மக்களுக்கு ஏற்பட்ட கோபத்தால் ஆலியா பட் நடித்து வெளிவரவுள்ள சடாக்2 படத்தின் டிரைலரை பலர் டிஸ்லைக் செய்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து பிடிக்காத வீடியோக்களை அதிகளவில் டிஸ்லைக் செய்வது பெரிய ட்ரெண்டாக மாறியுள்ளது.

முன்னதாக பிரதமர் மோடி பேசிய ஆகஸ்டு மாதத்திற்கான மன் கீ பாத் நிகழ்ச்சியின் வீடியோ பாஜக அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் வெளியிடப்பட்டது. அதற்கு லைக்குகளை விட டிஸ்லைக்குகளை பலர் அளித்து ட்ரெண்ட் செய்து வந்த நிலையில் லைக், டிஸ்லைக் எண்ணிக்கை காட்டும் வசதி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி புதிய கல்வி கொள்கை குறித்து பேசிய வீடியோ யூட்யூபில் பதிவேற்றப்பட்டது. அதற்கு 5 ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ள நிலையில், 34 ஆயிரத்திற்கும் மேல் டிஸ்லைக்குகளும் கிடைத்துள்ளது. தொடர்ந்து பிரதமர் மோடியின் வீடியோக்கள் டிஸ்லைக் பெற்று வருவது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்