தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமான டிக்கெட் கட்டணம் மீது அதிரடி ஆஃபர்களை விமான நிறுவனங்கள் வழங்கியுள்ளன.
சலுகைகள் வழங்குவதில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், கோ-ஏர், விஸ்தாரா போன்ற விமான நிறுவனங்களுக்கு இடையே அதிக போட்டி நிலவுகிறது.
ஏர் இந்தியா இணையதளம் மற்றும் மொபைல் மூலம் டிக்கெட் பெறும் மக்களுக்கு 10 சதவிகித ஆஃபரை வழங்கியுள்ளது. அக்டோபர் 13 முதல் டிசம்பர் 15 வரை இந்த ஆஃபர்கள் செல்லுபடியாகும்.
கோ-ஏர் நிறுவனம் ரூ.1,073-க்கு விமான டிக்கெட் வழங்குவதாக அறிவித்துள்ளது. சென்னை-ஹைதராபாத், டெல்லி-சண்டிகர், சண்டிகர்-டெல்லி, ஹைதராபாத்-சென்னை, லக்னோ-டெல்லி, கொல்கத்தா-பாட்னா, கொல்கத்தா-புவனேஸ்வர், லக்னோ-கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு கோ ஏர் ஆஃபர் டிக்கெட்டுகளை வழங்குகின்றன.
மேக் மை ட்ரிப் மற்றும் கிளியர் மை டிரிப் மூலம் டெல்லியிலிருந்து மும்பை செல்வதற்கும் பெங்களூர் செல்வதற்கும் ரூ.2,000 இருந்து ரூ. 3,000 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.