இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை

Webdunia
திங்கள், 29 ஏப்ரல் 2019 (21:27 IST)
இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஷ்தானில் உள்ள ஐஎஸ். ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் ஜெய்ஸ் - இ - முகமது அமைப்பைச்  சேர்ந்த தீவிரவாதிகள்  பலர் சந்தித்து பேசி ஆலோசனை நடத்தியதாகவும், இந்தியாவில் பெரிய தாக்குதல் நடத்தவுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.
 
சமீபத்தில் புல்வாமாவில் நடந்த தாக்குதலைப் போல் இன்னொரு தாக்குதலை காஷ்மீரில் அரங்கேற்ற இந்த தீவிரவாதிகள் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளன.
 
இலங்கை தாக்குதலுக்காக, நேற்று  கேரளாவில் உள்ள இருபேரை சந்தேகத்தின் பேரில்  கைது செய்துள்ள  தேசிய புலனாய்வு முகமை, அவர்களிடம் தீவிரமாக  விசாரித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்