தண்ணீரை திறந்துவிடுங்கள்: தமிழக முதல்வருக்கு பினராயி விஜயன் கடிதம்!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (08:08 IST)
கேரளாவுக்கு தேவையான தண்ணீரை திறந்து விடுங்கள் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கேரள முதல்வரும் பினராயி விஜயன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். 
 
முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை நெருங்குவதை அடுத்து அணையில் இருந்து அதிகபட்சமாக கால்வாய் வழியாக வைகை அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார் அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது
 
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டு பக்கம் வினாடிக்கு 1,750 கனஅடி தண்ணீரை திருப்பி விட்ட பிறகும், மாலை 4 மணி நிலவரப்படி, அணைக்கு நிகர நீர்வரத்து வினாடிக்கு 2,109 கன அடியாக இருக்கிறது. தற்போது நீர்மட்டம் 136.85 அடியாக உள்ளது. மழை மேலும் தீவிரம் அடைந்தால், அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்து விடும் என்று அஞ்சப்படுகிறது.
 
அப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழ்நாட்டுக்கு கால்வாய் வழியாக படிப்படியாக தண்ணீரை திறந்துவிட வேண்டிய அவசர தேவை ஏற்படும். ஆகவே, தாங்கள் இப்பிரச்சினையில் தலையிட்டு, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிகபட்ச தண்ணீரை கால்வாய் வழியாக வைகை அணைக்கு திறந்து விடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்