வினாடிக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர்: இடுக்கி அணை திறப்பு!

புதன், 20 அக்டோபர் 2021 (08:52 IST)
இடுக்கி அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால்  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக கேரளாவில் புரட்டிப் போட்ட கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டது. 
 
இதனால் ஆசியாவின் உயரமான அணையாக கருதப்படும் இடுக்கி அணையில் நீர் மட்டும் அதிகரித்தது. இதனால் நேற்று இடுக்கி அணையின் மூன்று மதகுகள் திறக்கப்பட்டன. விநாடிக்கு ஒரு லட்சம் லிட்டர் வீதம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணை திறந்ததையடுத்து பெரியாறு கரைகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்