50 லிட்டர் காருக்கு 57 லிட்டர் பெட்ரோல்! – நீதிபதிக்கே அல்வா குடுத்த பெட்ரோல் பங்க்!

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (12:23 IST)
மத்திய பிரதேசத்தில் கொள்ளளவுக்கு மேல் பெட்ரோல் நிரப்பியதாக நீதிபதியிடமே ஏமாற்ற முயன்ற பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல நிறுவனங்களின் பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வரும் நிலையில் சமீபமாக உயர்ந்த பெட்ரோல் விலை மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பெட்ரோல் பங்குகள் சரியான அளவில் பெட்ரோல் நிரப்பினாலும், சில பங்குகளில் 1 லிட்டர் பெட்ரோல் நிரப்பிவிட்டு 2 லிட்டர் பெட்ரோல் நிரப்பியதாக மோசடி செய்யும் சம்பவங்களும் சிலசமயம் நடக்கின்றன.

அப்படியான ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசத்தின் ஜபால்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நீதிபதி ஒருவர் தனது காருக்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார். டேங்க்கை நிரப்புமாறு அவர் கூறியுள்ளார். பெட்ரோல் நிரப்பிய ஊழியர் 57 லிட்டர் பெட்ரோல் நிரப்பியதாக பில் போட்டுள்ளார். ஆனால் அந்த காரின் மொத்த பெட்ரோல் கொள்ளளவே 50 லிட்டர்தான்.

பெட்ரோல் பங்கின் இந்த மோசடி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அந்த நீதிபதி புகார் அளித்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர்கள் பலர் இவ்வாறாக ஏமாற்றப்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த பெட்ரோல் பங்க் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்