தொடர்ந்து 16வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (06:55 IST)
உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே இருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 7ஆம் தேதி முதல் உயரத்தொடங்கிய பெட்ரோல், டீசல் விலை இன்று 16வது நாளாக விலையேறியுள்ளது
 
சென்னையில் இன்று அதாவது ஜூன் 22ஆம் தேதியின் பெட்ரோல் விலை லிட்டருக்கு 82.87 ரூபாய் என்றும், டீசல் விலை லிட்டருக்கு 76.30 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று லிட்டர் பெட்ரோல் 82.58 ரூபாய்க்கும்; டீசல் 75.80 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில் இன்று, லிட்டர் பெட்ரோல் 29 காசுகளும், டீசல் விலை 50 காசுகளும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் கடந்த 16 நாட்களில் அதாவது ஜூன் 7 முதல் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 7.33 ரூபாய் விலை உயர்ந்தும், டீசல் லிட்டருக்கு 8.08 ரூபாய் விலை உயர்ந்தும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வேலையின்றி, வருமானம் இன்றி உள்ள நிலையில் பெட்ரோல் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்