சினிமா தியேட்டர்கள் இயங்க அனுமதி – 5-வது கட்ட தளர்வுகள் அறிவித்த மத்திய அரசு

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (20:22 IST)
கொரொனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த மார்ச்சி 24 ஆம் தேதி முதல் மத்திய ஊரடங்கு அறிவித்துள்ளது. 4 வது கட்ட ஊரடங்களில் சில தளர்வுகளுடன்  சினிமா ஷூட்டிங்  நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று 5 வது கட்டமாக சில தளர்வுகளுட்யன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது மத்திய அரசு.

இதில் சினிமா துறையினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக  50%  இருக்கைகளுடன் சினிமா தியேட்டர் இயங்க மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் சினிமா தியேட்டர்களின்  50 சதவிகித டிக்கெட்களை மட்டுமே விற்பனை செய்யலாம் எனவும் பொழுது போக்கு பூங்காக்களையும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அக்டோபர் 15 முதல், நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி எனவும், பள்ளிகளைத் திறப்பது பற்றி மாநில அரசுகள் முடிவு  செய்யலாம் எனவும், அதேசயம் கொரொன கட்டுப்பாடு பகுதிகளில் தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் - மத்திய அரசு நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது
 

மேலும் இந்தியா முழுவதிலும் உள்ள  கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளிலும்  அக்.31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்