பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் - அமித்ஷா விளக்கம்

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (21:17 IST)
மத்திய அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரின் தொலைபேசி அழைப்புகளை மத்திய அரசு ஒட்டுக்கேட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரின் தொலைபேசி அழைப்புகளை மத்திய அரசு ஒட்டுக்கேட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், மத்திய அரசு யாரையும் ஒட்டு கேட்கவில்லை என கூறியிருந்தார், ஆனால் வைஷ்னவ் தொலைபேசியையே 2017 முதலாக ஒட்டு கேட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர் போன்ற பலரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலிய தயாரிப்பான பெகாசஸ் –( இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ எனும் இணையப் பாதுகாப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ரகசிய மென்பொருளாகும்) ரகசிய மென்பொருளைப் பயன்படுத்தி இந்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அமித்ஷா கூறியுள்ளதாவது:  இந்தியாவில் பெயரிற்கு உலக அரங்கில் களங்கம் கற்பிக்கும் நோக்கில்தான் பெகாசஸ் விவகரம் வெளியாகிறது. இந்தச் சதித் திட்டங்கள்  மூலம் இந்தியாவில் வளர்ச்சியை யாராலும் தடம் புரள வைக்க முடியாது எனத்தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் பொய் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்