தனியார் செட்டாப் பாக்ஸுக்கு தடை !

திங்கள், 19 ஜூலை 2021 (20:25 IST)
தமிழகத்தில்  பல ஆண்டுகளாக தனியார் கேபிள் சேவை இருந்து வந்த நிலையில் அவற்றிற்கு மாதம்தோறு பல இடங்களில் பல்வேறு விதமாக கட்டணம் வசூல் செய்து வந்தனர்.

இதையடுத்து, தமிழகத்தில் கேபிள் டிவியை அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

இந்நிலையில், கேபில் டிவி பயன்படுத்தும் மக்கள் வீடுகளில் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் மூலம் அரசு செட்டாப் பாக்ஸ் விநியோகம் செய்துள்ளது.

இதில் குறிப்பிட்ட சேன்லகளைத் தவிர பிறவற்றிற்குக்  ரூ.1 முதல் ரூ.3 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில சேனல்கள் இலவசமாகவுள்ளது.

இந்நிலையில் தனியார் செட்டாப் பாக்ஸ்களை அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்