நடுவானில் விமானத்தில் வந்த புகை.. பயணிகள் அதிர்ச்சி..!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (21:34 IST)
துபாயில் இருந்து கேரளா வந்த விமானத்தில் கழிவறையில் இருந்து திடீரென புகை வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 
 
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானம் ஒன்று கேரள மாநிலம் கொச்சிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் கழிவறையில் இருந்து புகை வந்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 
 
உடனடியாக கழிவறையை திறந்து பார்த்தபோது அங்கு பயணி ஒருவர் புகை பிடித்ததை அடுத்து அந்த பயணியை எச்சரிக்கை செய்த விமான ஊழியர்கள், கொச்சியில் விமானம் தரையிறங்கியதும் அந்த பயணியை போலீசாரிடம் ஒப்படைத்தனர் 
 
போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கழிவறையில் இருந்து புகை வந்ததால் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்