அட்லீக்கு என்ன குழந்தை தெரியுமா? புகைப்படத்துடன் ஹேப்பி நியூஸ் கூறிய பிரியா!

செவ்வாய், 31 ஜனவரி 2023 (19:28 IST)
ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அட்லீ - பிரியா தம்பதி!
 
இளம் இயக்குனராக அட்லீ பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்து ராஜாராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதையடுத்து மெர்சல், பிகில் , தெறி உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருக்கிறார்.
 
இவர் பிரியா என்ற குறும்பட நடிகையை காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இதையடுத்து சுமார் எட்டு ஆண்டுகள் கழித்து அட்லியின்  மனைவி கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
அதையடுத்து வளைகாப்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இந்த தம்பதிக்கு இன்று ஜனவரி 31ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தியை தெரிவித்துள்ளனர். எல்லோரும் சொல்வது சரிதான். இப்படி ஒரு உணர்வு உலகில் இல்லை.
 
அது போலவே எங்கள் ஆண் குழந்தை இங்கே உள்ளது! பெற்றோரின் புதிய அற்புதமான சாகசம் இன்று தொடங்குகிறது! நன்றியுடன். சந்தோஷமாக. பாக்கியமாக உணர்கிறேன் என கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்