எதிர்க்கட்சிகள் - பாஜக எம்பிக்கள் அமளி .. இன்று ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம்..!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (12:51 IST)
எதிர்க்கட்சிகள் மற்றும் பாஜக எம்பிக்கள் அமளி காரணமாக இன்றும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை குறித்து பிரதமர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிகள் கடந்து சில நாட்களாக பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதம் நடத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தி வருகிறார். 
 
இதனால் பாஜக மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மாறி மாறி முழக்கமிட்டதால் மாநிலங்கள் அவை முடங்கியது. இதனை அடுத்து இன்று முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்