இன்று மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்.. தொடங்கிய 2 நிமிடங்களில் ஒத்திவைப்பு..!

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (11:35 IST)
இன்று பிரதமர் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய பாராளுமன்ற கூட்டம் தொடங்கிய இரண்டே நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
நாடாளுமன்றத்தின் இன்றைய அவை நிகழ்வுகள் தொடங்கிய இரண்டு நிமிடங்களில் எதிர்க்கட்சி எம்பிக்களின் முழக்கம் காரணமாக பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 இதனை அடுத்து மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் 12 மணிக்கு தொடங்க உள்ளது. கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு நம்பிக்கை இல்லாத தீர்மானம் மீதான விவாதத்தை தொடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்