சர்வதேச பொருளாதார காரணிகளால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக வேகமாக விலை உயர்ந்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்குள் தங்கம் விலை அடுத்தடுத்து புதிய உச்ச விலையை தொட்டது. இந்நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்றும் விலை உயர்ந்து புதிய உச்ச விலையை அடைந்துள்ளது தங்கம்.
மாதத்தின் கடைசி நாளான நேற்று சவரனுக்கு ரூ720 உயர்ந்த தங்கம் விலை சவரன் ரூ.86,880 ஆக விற்பனையாகி வந்தது. ஒரு கிராம் ரூ.10,860 ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று கிராமுக்கு ரூ.30 உயர்ந்துள்ள தங்கம் விலை கிராம் ரூ.10,890 ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.87,120 ஆக உயர்ந்துள்ளது.
அதாவது கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு சவரன் ரூ.83,440 க்கு விற்பனையாகி வந்த தங்கம் தற்போது ரூ.3,680 உயர்ந்துள்ளது. 10 நாட்களுக்குள் இவ்வளவு விலை உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K