பிண அரசியல் செய்யும் விஜய்! பாஜகவின் கருவியாகிவிட்டார்! - திருமாவளவன்!

Prasanth K

புதன், 1 அக்டோபர் 2025 (09:59 IST)

கரூர் கூட்டநெரிசல் பலி குறித்து நேற்று விஜய் வெளியிட்ட வீடியோ மூலம் அவர் பாஜக கருவியாக செயல்படுவது உறுதியாகிவிட்டதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

 

கரூரில் தவெக பிரச்சாரத்தில் 41 பேர் பலியான விவகாரம் குறித்து நேற்று விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், அதில் கூட்டத்தில் சதி நடந்திருப்பதாகவும், முதல்வர் குறித்தும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இதுகுறித்து பேசியுள்ள விசிக தலைவர் திருமாவளவன் “கரூரில் நடந்த பெருந்துயரத்திற்காக விஜய் வருந்துவதாக தெரியவில்லை. 10 மணி நேரமாக அவரை பார்ப்பதற்காக காத்திருந்து நெரிசலில் சிக்கி இந்த பேரவலம் நடந்தது என்ற உண்மையை அவர் உணர்ந்தது போல தெரியவில்லை.

 

41 பேர் பலியானது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்பில்லாத தனத்தால் ஏற்பட்ட பேரிடர். அந்த நிலையில் மக்களுக்கு உதவிய, ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது பழிசுமத்தி விஜய் பேசியிருப்பது அவரது நேர்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. உயிர்பலிகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார் விஜய்.

 

இது சங்பரிவார்களின் சதிவலையில் விஜய் சிக்கியுள்ளதை உறுதிப்படுத்துகிறது. திமுகவுக்கு எதிரான வெறுப்பு அரசியல் செய்பவர்களின் கோரப்பிடியில் விஜய் சிக்கியுள்ளார். அவர் பாஜகவின் கருவியாக செயல்படுவது உறுதியாகியுள்ளது” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்