வணிக சிலிண்டர் விலை உயர்வு! மாத முதல் நாளே அதிர்ச்சி!

Prasanth K

புதன், 1 அக்டோபர் 2025 (10:23 IST)

மாதத்தின் முதல் நாளான இன்று சிலிண்டர்கள் விலை மாற்றம் செய்யப்படும் நிலையில் விலை உயர்ந்துள்ளது.

 

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கொள்முதலை கணக்கிட்டு பெட்ரோலிய நிறுவனங்களே மாதம்தோறும் சிலிண்டர்கள் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்நிலையில் மாதம்தோறும் வணிக கேஸ் மற்றும் வீட்டு கேஸ் சிலிண்டர்கள் விலை அறிவிக்கப்பட்டு வருகிறது,

 

அதன்படி, இந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.16.50 உயர்ந்து ரூ.1,754.50 ஆக விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் வணிக சிலிண்டர் ரூ.1,738 க்கு விற்பனையாகி வந்தது. வீட்டு உபயோக சிலிண்டர் இந்த மாதமும் எந்த மாற்றமும் இன்றி ரூ.868.50 ஆக விற்பனையாகி வருகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்