எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி: நாடாளுமன்றம் மீண்டும் முடங்கியது

திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (11:54 IST)
எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்த முடியாமல் இருக்கும் நிலையில் இன்று மீண்டும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி செய்ததன் காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் பேச வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிகள் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 
எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றம் இன்று தொடங்கிய சில மணி நேரங்களிலேயே மீண்டும் முடங்கியது. 
 
இதனை அடுத்து மக்களவை 12 மணி வரையும் மாநிலங்களவை மதியம் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்