பீகாரில் நடந்து வந்த சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் நிறைவடைந்த நிலையில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் தகுதியற்ற, போலி வாக்காளர்களை நீக்கும் பணி நடைபெற்ற நிலையில், இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் பீகாரில் வாக்காளர் திருத்த பணிகள் பல கட்டங்களாக நடந்து வந்த நிலையில், தற்போது மொத்தமாக திருத்த பணிகள் முடிந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 21.53 லட்சம் புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த திருத்த நடவடிக்கைக்கு முன்னதாக 7.89 கோடியாக இருந்த மொத்த பீகார் வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது 7.42 கோடியாக குறைந்துள்ளது.
Edit by Prasanth.K