கூகுளில் டிரெண்ட் ஆன பக்கோடா - புதுச்சேரி, தமிழ்நாடு முன்னிலை

Webdunia
வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (10:55 IST)
பக்கோடா விற்பதும் ஒரு நல்ல தொழில்தான் என பிரதமர் மோடி கூறியதையடுத்து, அந்த வார்த்தை கூகுளில் டிரெண்டியாக உள்ளது.

 
பிரதமர் மோடி சமீபத்தில் பக்கோடா விற்பவர் கூட நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் வருவாய் ஈட்டுவதாக தெரிவித்தார். இதற்கு பாஜக தலைவர் அமித்ஷாவும் பக்கோடா விற்பனை செய்வது தவறல்ல என்றார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.
 
அதோடு, இந்தியா முழுவதும் பட்டதாரி இளைஞர்கள் தெருவில் பக்கோடாவை தயாரித்தும், விற்பனை செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

 
இந்நிலையில், பக்கோடா என்கிற வார்த்தை கூகுளில் டிரண்ட் ஆகியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பக்கோடா என்கிற வார்த்தையை பலரும் இணையத்தில் தேடினர். இதில், புதுச்சேரி முதலிடத்திலும், தமிழகம் 2ம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
அதில் பலர் மோடி பக்கோடா, பாஜக பக்கோடா, அருண்ஜேட்லி பக்கோடா என்கிற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தி தேடியது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்