நாங்கள் போரை விரும்பவில்லை.. ஆனால் பாகிஸ்தான் துப்பாக்கியை கீழே போட வேண்டும்: ஒமர் அப்துல்லா

Mahendran

புதன், 7 மே 2025 (12:13 IST)
“நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் போரை தவிர்க்க வேண்டுமானால், பாகிஸ்தான் தங்களுடைய துப்பாக்கிகளை கீழே போட வேண்டும்,” என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து அவர் கூறும்போது, “நாம் யாருமே போரை விரும்பவில்லை. ஜம்மு காஷ்மீரில் நிலைமை மேம்பட  வேண்டும்  என்று தான் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் அதற்காக, நமது அண்டை நாடான பாகிஸ்தான் தங்களது துப்பாக்கிகளை கீழே வைக்க வேண்டும்,” என்றார்.

“அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாகத்தான் மத்திய அரசு இந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியுள்ளது. இதுதான் சரியான பதிலடி முறை என்பது என் கருத்து. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டுள்ளன. ராணுவ அமைப்புகளுக்கோ பொதுமக்களுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை,” என்றார்.

“பாகிஸ்தான் போரை தவிர்க்க விரும்புகிறதானால், தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும். தங்கள் துப்பாக்கிகளை கீழே போட வேண்டும்,” என்று உமர் அப்துல்லா வலியுறுத்தினார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்